உடன் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் டக்ளஸ் உறுதி
யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவ தவறுகள் காணப்பட்டால் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.
யாழில். இன்றைய தினம் (26.12.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், யாழ். போதனா வைத்திசாலையில் மருத்துவ தவறுகளால் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன என்பது தொடர்பில் எனக்கு அறிய தரப்பட்டது.
குறைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும்
அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது மாத்திரமன்றி அவ்வாறான மருத்துவ தவறுகள் காணப்பட்டால் அவற்றை களைவதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்.
அத்துடன், போதனா வைத்தியசாலையில் நிலவுவதாகவும் கூறப்படும் மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
அதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வருகை தரும் போது யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் நேரில் தெரிவித்து, அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளேன்.
டெங்கு ஒழிப்பு செயற்றிட்டங்கள்
மேலும், யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுத்து வருகின்றது.
இது தொடர்பில் சுகாதர சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரனுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கூறியதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளோம்.
தொடர்ந்து, நுளம்புக்கு புகை அடிப்பது, டெங்கு பரவும் சூழல்களை இனங்கண்டு அவற்றை அழிப்பது போன்ற செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam
