யாழில் காணி விடுவிப்புக்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் வழங்கியுள்ள உறுதி
யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வருகின்ற வேளை காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றைய தினம் (26.12.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், வனவள பாதுகாப்பு, வன ஜீவராசி திணைக்களம் என்வற்றின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பில் காணப்படும் 11 கட்டங்களில் 4 கட்டங்களே பூர்த்தியாகியுள்ளன.
காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை
ஏனைய கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதோடு அவை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் 100 வீதம் பூர்த்தியடையும் என்ற நம்பிக்கை உண்டு.
மேலும், உயர் பாதுகாப்பு வலயமாக படைத்தரப்புக்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க தொடர்ந்து முயற்சிக்கிறேன். முடிந்த வரையில் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகளை எடுப்பேன்.
ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வரும் வேளையில் அவர் காணிகளை விடுவிப்பார். அல்லது அது தொடர்பில் பச்சை கொடியை காட்டுவார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு
வடக்கில் எமது மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் நிறைய இருந்தமையால் நான் வடக்கில் தங்கி இருந்தேன். அதனால் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு செல்லவில்லை.
எனவே, எனது கட்சி சார்பில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் கலந்து கொண்டார்
ஜனாதிபதியுடன் மக்களுக்காக தொலைபேசியில் கதைக்க கூடிய நிலையில் உள்ளதோடு பல்வேறு தடவைகள் கதைத்தும் உள்ளேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 16 நிமிடங்கள் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri
