மலையக தமிழரின் குறை வளர்ச்சிக்கு இந்திய - பிரித்தானிய அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்: மனோ கணேசன்

Sri Lanka Upcountry People Sri Lankan Tamils Mano Ganeshan
By Dharu Dec 26, 2023 12:48 PM GMT
Report

மலையக தமிழரின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற 200ல் மலையக மாற்றம் விழாவில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்திய போதே இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வரலாறு, நிகழ்கால அவலங்களுக்கு அப்பால் நாம் இன்று எங்கே, எப்படி நிற்கிறோம், எங்கே, எப்படி போக வேண்டும் என்ற எதிர்காலம் கூற வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது.

பிரான்ஸில் தலைமறைவாகியுள்ள பாரிய குற்றவாளி: இலங்கைக்கு அழைத்து வர முயற்சி

பிரான்ஸில் தலைமறைவாகியுள்ள பாரிய குற்றவாளி: இலங்கைக்கு அழைத்து வர முயற்சி

மலையக தமிழரின் வளர்ச்சி

இந்நாட்டின் சிங்கள, ஈழத்தமிழ், முஸ்லிம் சகோதர இனத்தவர் தங்கள் ஓட்டங்களை 1948லேயே ஆரம்பித்து விட்டார்கள்.

மலையக தமிழரின் குறை வளர்ச்சிக்கு இந்திய - பிரித்தானிய அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்: மனோ கணேசன் | Indian British Govt Sri Lankan Tamils Issue

மலையக தமிழர் தமது குடியுரிமையை சட்டப்படி முழுமையாக பெற்றுக்கொள்ளவே 2003ம்  வருடம் ஆகிவிட்டது. ஆகவே நாம் எமது ஓட்டத்தை தாமதமாக ஆரம்பித்த பிரிவினர் ஆகும்.

எமது அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார அடைவுகள், சகோதர இனத்தவர்கள் அடைந்துள்ள, இலக்குகளை விட குறைவாக இருப்பது ஆச்சரியம் அல்ல.

ஆனால், இந்த இருபது வருடங்களில் ஏனையோர் மரதன் ஓடும்போது நாம் நூறு மீட்டர் ஓடி வேகமாக பல முன்னேற்றங்களை கண்டுள்ளோம். எனினும் இன்னமும் நாம் போக வேண்டிய தூரம் கணிசமாக இருக்கிறது.     

நாம் அடையவேண்டிய வளர்ச்சியை அடையாமல் குறைவளர்ச்சியில் நிற்கிறோம். மலையக தமிழரின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டு பொறுப்பேற்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றம் வரும் போதெல்லாம், 1948ல் இலங்கையின் அந்நிய செலவாணி தொகை ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்தபடியாக அதிகமாக இருந்தது என்று பெருமையாக கூறுவார்.

[UGMQIEA ]

சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம்

அது உண்மை. அதன் பின்னுள்ள கசப்பான உண்மை என்ன? அந்த அதிக தொகை அந்நிய செலவாணியை இரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்தி பெற்று தந்தது நமது மக்களின் தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட உழைப்பினால் கிடைத்த ஏற்றுமதி வருமானம் ஆகும்.

ஆனால், இதற்காக 1948லேயே முதல் சுதந்திர இலங்கை அரசு எமக்கு செய்த கைம்மாறு என்ன? எமது குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்து எம்மை நாடற்ற மக்கள் ஆக்கியதே அந்த  கைம்மாறு ஆகும்.

மலையக தமிழரின் குறை வளர்ச்சிக்கு இந்திய - பிரித்தானிய அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்: மனோ கணேசன் | Indian British Govt Sri Lankan Tamils Issue

1964ல் எம்மை கலந்தாலோசித்து எமது உடன்பாடுகளை பெறாமலேயே இந்திய அரசு, எம்மில் பெரும்பான்மையோரை நாடு கடத்த உடன்பாடு தெரிவித்தது.

அன்று ஏற்படுத்தப்பட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் மூலமாக எமது மக்கள் கால்நடைகள் போல் நாடு கடத்தப்பட்டு, இங்கே நாம் அரசியல்ரீதியாக பலவீனபடுத்தப்பட்டோம்.

 இந்த ஒப்பந்தம் எமக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் ஆகும். 1972 வரை நாம் குடியரசு ஆகவில்லை. அதுவரை பிரித்தானிய மகாராணியார் தான் எமது தேசத்தலைவராக இருந்தார்.

நாம் டொமினியன் சிலோன் என்ற நாடாக இருந்தோம். எம்மை 200 வருடங்களுக்கு முன்னர் இங்கே கொண்டு வந்தவர்களும் அவர்கள்தான்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

எதிர்கால வளர்ச்சி

1948ல் எமது குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்ட போதும், 1964ல் நாடு கடத்தல் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதும் பிரித்தானிய மகாராணியார் கண்ணை மூடிக்கொண்டு இருந்தார்.

இந்த ஒப்பந்தம் பிரித்தானிய அரசால் எமக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் ஆகும்.    

இந்த வரலாற்றின் காரணமாக, எமது எதிர்கால வளர்ச்சிக்கு உதவிட வேண்டிய தார்மீக கடப்பாடு இன்று, இந்திய, பிரித்தானிய அரசுகளுக்கு உண்டு.

மலையக தமிழரின் குறை வளர்ச்சிக்கு இந்திய - பிரித்தானிய அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்: மனோ கணேசன் | Indian British Govt Sri Lankan Tamils Issue

அதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், இங்கிலாந்து பிரதமர் ரீஷி சுனக் அவர்களும் நிறைவேற்ற வேண்டும் எனக்கோருகிறேன்.

கடந்த வாரம் நானும், இராதாகிருஷ்ணனும் இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதுவர் அன்ரூ பெட்ரிக்கை சந்தித்த போது, இதை  நான் அவருக்கு தெளிவாக எடுத்து கூறினேன்.

அவரது இன்றைய பிரித்தானிய மன்னர் சார்ள்சின் அரசு எமக்கு உதவிட வேண்டும். இந்தியாவின் கடப்பாடு பற்றி நான் பலமுறை இந்திய தலைவர்களிடம் எடுத்து கூறியுள்ளேன்.    

இலங்கையின் கடப்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார் திசாநாயக்க ஆகியோர் நிறைவேற்ற வேண்டும். எனது கருத்தை இவர்களுக்கும் நான் பலமுறை எடுத்து கூறியுள்ளேன்” என்றார்.

நாட்டில் சிறுவர்களிடையே பரவும் நோய்: பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் சிறுவர்களிடையே பரவும் நோய்: பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US