"Don't worry, Be happy.." ட்ரம்பின் கடும் மிரட்டலுக்கு மத்தியில் பாடல் பாடிய நிக்கோலஸ் மதுரோ
வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றார்.
இந்நிலையில், நிக்கோலஸ் மதுரோ, பொது நிகழ்வொன்றின் போது, "போருக்கு எதிரான அமெரிக்கர்களுக்காக நான் ஒரு பிரபல பாடலை பாடுகின்றேன்” என கூறி பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
"Don't worry, Be happy.." என ஆரம்பமாகும் குறித்த பாடலை நிக்கோலஸ் மதுரோ இதன்போது பாடியுள்ளார்.
கேலியான பாடல்
இது தற்போது சர்வதேச சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றது.
#MOMENT #VenezuelanPresident #NicolasMaduro invoked #BobbyMcFerrin's 1988 hit song "Don't Worry, Be Happy" during a rally with supporters on Wednesday amid #US pressure. https://t.co/V0ElqUOwhU pic.twitter.com/1s49rND6k3
— ShanghaiEye🚀official (@ShanghaiEye) December 11, 2025
மேலும், அந்த பாடலில், "Don't worry, Be happy.. just peace, no war" என நிக்கோலஸ் மதுரோ கூறி பாடியுள்ளார்.
இதன் அர்த்தம், "கவலை வேண்டாம். மகிழ்ச்சியாக இருப்போம்.. எப்போதும் அமைதி, போர் என்பதில்லை” என்னும் வகையில் அமைந்துள்ளது.
பொதுவாகவே ட்ரம்ப் தெரிவிக்கும் கூற்று இது எனலாம், அமைதியின் அவசியத்தையும் போர் வேண்டாம் என்பதையும் ட்ரம்ப் அடிக்கடி பதிவு செய்வார்.
இருப்பினும், வெனிசுலா விவகாரத்தில் அதிரடி நடவடிக்கைகளை ட்ரம்ப் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் ட்ரம்பை விமர்சிக்கும் வகையில் இந்த பாடலை பாடியுள்ளார்.
வடக்கில் வெள்ள நிவாரணம் வழங்க மறுத்த கிராம சேவகர்! முறைபாட்டிற்கு பின்னர் குடும்பங்களுக்கு நிவாரணம்..
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri