நிவாரணப் பொருட்களை பிரித்துக் கொள்ளும் அரச அதிகாரிகள்! அம்பலமாகும் மோசடி
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் பல நிவார உதவிகளை செய்து வருகின்றது.
ஆனால் அதிலும்,தாகத்துக்கு வழங்கப்படும் தண்ணீர் போத்தல்கள் கூட அதிக விலைக்கு விற்ற சம்பவம், நிவாரணப் பொருட்களை பிரித்துக் கொள்ளும் அரச அதிகாரிகள் என்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும், இன, மத, அரசியல் பேதங்களின்றி இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்ததை இந்த பேரிடரில் காணக்கூடியதாக இருந்தது.
பல வருடங்களாக எதிரிகளாக இருந்த பாகிஸ்தான் இலங்கைக்கு உதவ ஒன்றிணைந்தது.
பாகிஸ்தான் விமானங்களுக்காக மூடப்பட்ட இந்திய வான்வெளி ஒரு சில மணித்தியாலங்களுக்காக கூட இலங்கைக்கு உதவ வான்வெளிகளை திறந்தன.
அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், பல சர்வதேச தன்னார்வ அமைப்புகள் இலங்கைக்கு உதவ முன்வந்தன.
எந்தவொரு பிரிவினையுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிய பல நல்ல உள்ளங்கள் இன்னும் உதவிக் கொண்டிருக்கக்கூடியவர்கள் என பல மனிதாபிமான செயல்களை எங்களால் காணக்கூடியதாக உள்ளது.
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri