பிரித்தானியாவில் தீவிரமடைந்து வரும் வைரஸ்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பிரித்தானியாவில் திடீரென பரவி வரும் காய்ச்சல் காரணமாக, அங்குள்ள மக்கள் உடன் தடுப்பூசி பெறவும் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 55 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் காய்ச்சல்
மேலும், சில மருத்துவமனைகள் நோயாளிகளை முகக்கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகின்றன, மேலும் நாடு முழுவதும் வைரஸ் பரவி வருவதால், அதிகமான மக்கள் காய்ச்சல் தடுப்பூசியை முன்பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த வாரம் சராசரியாக 2,660 நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை படுக்கையில் இருந்ததாக NHS இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, இந்த வருடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த நிலை இதுவென்றும், இது இதுவரை இல்லாத வகையில் சூப்பர் ஃப்ளூ அலை என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டு காய்ச்சலால் மருத்துவமனைகளை நாடியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று NHS தேசிய மருத்துவ இயக்குநர் பேராசிரியர் மேக்னா பண்டிட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது, மேலும் இந்த எண்ணிக்கையின் உச்சம் எதுவென இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியல்லை என்றும், இதனால் NHS மிகவும் சவாலான சூழ்நிலையை எதிர்கொள்கிறது என்றும் மேக்னா தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா முழுவதும் வழக்கத்திற்கு மாறாக தொடக்க மற்றும் கடுமையான காய்ச்சல் பரவலை எதிர்கொண்டு வருகிறது. ஐரோப்பா கண்டம் முழுவதும் உள்ள சுகாதார அதிகாரிகள், அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறித்தும் எச்சரித்துள்ளனர்.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri