டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
அமெரிக்க இறக்குமதிகள் மீது சீனா விதித்துள்ள 34% பதிலடி வரிகளை உடனே திரும்பப் பெறாவிட்டால் சீனா மீது 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
செவ்வாய்கிழமை முதல் சீனா மீது கூடுதல் வரியை விதிக்க ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 9 முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.
பங்குச்சந்தை வீழ்ச்சி
இதனையடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா மீதும் இதேபோன்ற வரிகளை விதிக்கப்போவதாக சீனா கூறியிருந்தது.
இந்நிலையில், குறித்த வர்த்தக பதற்றத்தால் அமெரிக்காவின் பங்குச்சந்தை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.
எனினும், அமெரிக்க மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் பலவீனமானவர்களாகவும் முட்டாள்களாகவும் இருக்க வேண்டாம் எனவும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |