ட்ரம்பின் மரண கணிப்பு! பேசுபொருளாகியுள்ள தி சிம்ப்சன்ஸ் காட்சி
சர்வதேச அளவில் அதிக ரசிகர்களை கொண்ட அனிமேஷன் நிகழ்ச்சியான தி சிம்ப்சன்ஸ் ஏப்ரல் 12, 2025 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மரணத்தை முன்னறிவித்ததாகக் கூறும் விடயம் தற்போது இணையத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட இது தொடர்பான காணொளியானது, ஒரு சவப்பெட்டியில் ட்ரம்ப் போன்ற உருவத்தை சித்தரிக்கும் நிகழ்ச்சியின் ஒரு காட்சியைக் காட்டுகிறது.
இந்த அனிமேஷன் நிகழ்ச்சியான தி சிம்ப்சன்ஸ் மீண்டும் ஒரு வினோதமான துல்லியமான தீர்க்கதரிசனத்தைச் செய்திருக்கிறதா? என்று பலரை ஊகிக்கத் தூண்டுகிறது.
ட்ரம்பின் மரணத்தை தி சிம்ப்சன்ஸ் கணித்ததா?
தி சிம்ப்சன்ஸின் பிரதான கதாப்பாத்திரமானது, டொனால்ட் ட்ரம்பின் ஜனாதிபதி பதவி மற்றும், ஸ்மார்ட் கடிகாரங்களின் கண்டுபிடிப்பு போன்ற வியக்கத்தக்க துல்லியமான கணிப்புகள் வெளிவந்த அதன் முந்தைய காணொளிகள் இந்த எதிர்பார்ப்பை தற்போது தூண்டியுள்ளன.
தி சிம்ப்சன்ஸ் காணொளியின் பின்னணியில் உள்ள நடவடிக்கைக் அதிகம் பேசுபொருளாகிவரும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப் போன்ற ஒரு கதாபாத்திரம் சவப்பெட்டியில் கிடப்பதைக் காட்டும் ஒரு காட்சியே இதற்கு பிரதான காரணமாகும்.
மேலும் இது ஏப்ரல் 12, 2025 அன்று ட்ரம்பின் மரணத்தைக் இது குறித்த காட்சி குறிப்பதாக கூறப்பட்டுள்ளது.
நிஜ உலக நிகழ்வு
தி சிம்ப்சன்ஸின் காட்சிகள் நிஜ உலக நிகழ்வுகளைப் பற்றிய சரியான கணிப்புகளைச் செய்வதாக அதன் ரசிகர்களிடையே நம்பப்படுகிறது.
எனினும், இந்த குறிப்பிட்ட காட்சி தி சிம்ப்சன்ஸின் உண்மை காட்சி இல்லை என்றும், AI தொழில்நுட்பத்தால்உருவாக்கப்பட்டது என்றும் சில எதிர் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
தி சிம்ப்சன்ஸின் நிர்வாக தயாரிப்பாளரான மாட் செல்மனின் கூற்றுப்படி,
குறித்த காணொளியில் காட்டப்பட்டுள்ள குறிப்பிட்ட காட்சி தொடரின் எந்த பகுதியிலும் தோன்றவில்லை.
உண்மையில், ட்ரம்பின் மரணம் அல்லது காணொளியில் பயன்படுத்தப்படும் காட்சிகளை ஒத்த எந்த பகுதியும் பழைய அல்லது சமீபத்திய தி சிம்ப்சன்ஸ் காட்சிகளில் இல்லை.
மாற்றியமைக்கப்பட்ட காணொளி
பெரும்பாலும் உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகளைத் தூண்டுவதற்கும், சிலரின் சமூக கணக்குகளின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் வடிவமைக்கப்பட்ட போலி காணொளிகள் இவ்வாறு வெளியாகின்றன.
கடந்த காலங்களிலும் இதே போன்ற சம்பவங்கள் தி சிம்ப்சன்ஸுடன் தொடர்புபட்ட டொனால்ட் ட்ரம்பின் உள்ளடக்கங்கள் அதிகம் பகிரப்பட்டன.
இது முதல் முறை அல்ல. குறைந்தது 2017 முதல், ட்ரம்பின் மரணத்தை நிகழ்ச்சி முன்னறிவித்ததாகக் கூறி, மாற்றியமைக்கப்பட்ட காணொளிகள் மற்றும் படங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
உதாரணமாக, ஜூலை 2024 இல் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சியைத் தொடர்ந்து இதேபோன்ற போலி காட்சிகள் அதிகம் பகிரப்படுகின்றன” என்றார்.