அரச ஊழியர்களுக்கு ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி..!
அமெரிக்காவின்(USA) உள்நாட்டு வருமான சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா தலைநகர் வோஷிங்டனில் உள்நாட்டு வருமான சேவை துறையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.
ஊழியர்கள் பணிநீக்கம்
இந்த துறையில் அமெரிக்கா முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
இதற்கிடையே ஜனாதிபதி ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு நாட்டின் பல்வேறு அரச துறைகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக கடந்த ஜனவரி மாதம் இத்துறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
தலைமை மனிதவள அதிகாரி, செயல் ஆணையர் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் பதவி விலக அறிவுறுத்தப்பட்டனர்.
ஆனால் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவர்களில் பலா் மீண்டும் பணியில் சேர்ந்தனர்.
இந்தநிலையில் தற்போது மேலும் 20 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க்
இதன்மூலம் 20 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இதுகுறித்த அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதற்கிடையே ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க்கை எதிர்த்து அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அத்துடன் எலான் மஸ்க்கும் டொட்ஜ் அமைப்பின் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.