பாதுகாப்பு காரணங்களால் கொழும்புக்கு திரும்பாத மோடி!

Anuradhapura Anura Dissanayake Narendra Modi
By Dharu Apr 07, 2025 09:21 AM GMT
Report

பாதுகாப்பு மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் காரணமாக  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரம் விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு, சிறப்பு நடவடிக்கையாக, அனுராதபுரம் விமான நிலையத்தினை,  ஒரு நாள் சர்வதேச விமான நிலையமாக மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இந்தியப் பிரதமர் அனுராதபுரத்திலிருந்து தென்னிந்தியாவின் ராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டார்.

அநுரவை சந்தித்த போது மோடிக்கு ஏற்பட்ட பதற்றம்

அநுரவை சந்தித்த போது மோடிக்கு ஏற்பட்ட பதற்றம்

விசேட ஏற்பாடு

இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் காரணமாக அவர் கட்டுநாயக்கவுக்குத் திரும்பாமல், சிறப்பு ஏற்பாடுகளைப் பயன்படுத்தி அவர் அனுராதபுரத்திலிருந்து தமிழ்நாட்டிற்குப் பயணித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Modi faces security challenges in Sri Lanka

இதற்கமைய மோடி மற்றும் அவரது குழுவினருக்குத் தேவையான பயண அனுமதி வசதிகளை வழங்குவதற்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், ரத்மலானை, மத்தள, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகியவை காணப்படுகின்றன.

இந்த நிலைமையை உறுதிப்படுத்திய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சாகர கொட்டகதெனிய, அனுராதபுரம் விமான நிலையம் 6 ஆம் திகதி ஒரு நாள் மட்டுமே சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் அதிரடியாக நுழைந்த இந்தியாவின் SIU விசேட கொமாண்டோக்கள்

இலங்கைக்குள் அதிரடியாக நுழைந்த இந்தியாவின் SIU விசேட கொமாண்டோக்கள்

அனுராதபுரம் விமான நிலையம் 

அனுராதபுரம் விமான நிலையம் பொதுவாக சர்வதேச விமானங்களை இயக்குவதற்குத் தேவையான வசதிகளைக் கொண்ட விமான நிலையம் அல்ல என்றும், பெரிய விமானங்களை தரையிறக்கத் தேவையான உள்கட்டமைப்பு அதில் இல்லை என்றும் அவர் மேலும் விளக்கியுள்ளார்.

Modi faces security challenges in Sri Lanka

இந்தியப் பிரதமர் மற்றும் அவரது தூதுக்குழுவினர் விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்குத் தேவையான அனுமதியை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில்  இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கொட்டகதெனிய மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மற்றைய குழு ஜூலை 6 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கஜேந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் அர்ச்சுனா - தையிட்டி போராட்டத்திற்கு செல்லாதது ஏன்..!

கஜேந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் அர்ச்சுனா - தையிட்டி போராட்டத்திற்கு செல்லாதது ஏன்..!

YOU MAY LIKE THIS..


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US