இலங்கைக்குள் அதிரடியாக நுழைந்த இந்தியாவின் SIU விசேட கொமாண்டோக்கள்
கடந்த வெள்ளிக்கிழமை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பெரும் பேசுபொருளாகியுள்ளன.
இந்திய - மற்றும் இலங்கை பாதுகாப்பு படையின் பலத்த கண்காணிப்புக்கு மத்தியிலேயே அவர் இலங்கைக்கு வந்திருந்தார்.
இரு நாட்டு அரசாங்கங்களும் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மிக உன்னிப்பான முறையிலும் இரகசியமான முறையிலும் மேற்கொண்டிருந்தன.
அதேவேளை, பிரதமர் நரேந்திர மோடியின் இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கு இந்தியாவின் SIU விசேட அதிகாரிகள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அதாவது, SIU விசேட கொமாண்டோக்கள், 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறப்பு படையின் வழிவந்த விசேட பாதுகாப்பு படையாகும். இது மிகவும் ஆபத்தான நாடுகளுக்கு செல்லும் போது இந்திய தலைவர்களுக்கு வழங்கப்படும் விசேட அதிகாரிகள் அணியாகும்.
இந்நிலையில், இத்தகைய அதீத பாதுகாப்பிற்கு மத்தியிலும் சவாலுக்கு மத்தியிலும் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும், SIU விசேட கொமாண்டோக்களின் வருகைக்கான காரணம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |