பூசா சிறைச்சாலையில் உயிரிழந்த கைதி: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
பூசா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்புக்குழு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கடந்த 4ஆம் திகதி காலை கத்திக்குத்து காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அதிகாரிகளுக்கு பணிப்பு
இந்நிலையில், இச்சம்பவம், தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் உள்ளக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதேவேளை, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான ஏற்பாடுகளையம் முன்னெடுப்பதாக நீதி அமைச்சகம் மற்றும் சிறைச்சாலைகள் துறையின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஏற்கனவே அனைத்து விசாரணைகளையும் விரைவாக முடித்து சம்பந்தப்பட்ட குழுவிடம் அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |