தொடர்ந்து வலுவிழக்கும் அமெரிக்க டொலர்
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(01.02.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலரின் பெறுமதியானது பாரிய வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (02.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 320.40 ரூபாவாகவும், கொள்வனவு விலை 310.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 240.12 ரூபாவாகவும், கொள்வனவு விலை 229.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 348.25 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 334.11 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 408.21 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 392.56 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கடந்த இரு வாரங்களாக வெளிநாட்டு நாணயங்கள் பலவற்றிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 14 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri

உக்ரைனில் கால் பதிக்கும் ஐரோப்பிய நாடுகளின் படைகள்! ரஷ்யா தொடர்பில் டிரம்ப் வழங்கிய உறுதி News Lankasri
