24 மணி நேரத்தில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் உயர்வு
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம்(26.10.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது.
கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இது திடீர் அதிகரிப்பாகும்.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.93 ரூபாவாகவும், கொள்வனவு விலை 321.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 241.81 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 352.1 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 337.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 402.76 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 387.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam