தமிழர்களை இனியும் மடையர்களாக்க முயலாதீர்: கூட்டமைப்பிற்கு அரசு வலியுறுத்து
"தமிழ் மக்களிடம் இந்தியா இருக்கின்றது, எமக்குத் தீர்வைத் தரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றி வருகின்றது. அதன் வெளிப்பாடாகத்தான் மீண்டும் புதுடில்லிக்குச் செல்ல கூட்டமைப்பின் தலைவர்கள் முயல்கின்றனர். தமிழ் மக்களை இனியும் மடையர்களாக்க முயல வேண்டாம் என்று அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்." என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் இந்தியா செல்லவுள்ளது என வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரையாக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் மீண்டும் கோவிட்டின் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளன. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோவிட்டுக்கு மத்தியிலும் தமது ஏமாற்று அரசியலை நடத்துகின்றனர்.
எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசுதான் தீர்வை வழங்கும். எந்த நாட்டின் அழுத்தங்களுக்கும் இலங்கை அடிபணியாது" என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam