பிரித்தானியாவில் தீபாவளி கொண்டாடிய ஸ்டார்மர்
பாரம்பரியத்திற்கு இதயப்பூர்வமான மரியாதை செலுத்தும் வகையில், பிரித்தானியாவின் (UK) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் லேபர் கட்சியினர் தீபாவளி தினத்தை கொண்டாடியுள்ளனர்.
இந்நிகழ்வானது, 10 டவுனிங் தெருவில் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, இந்த தீபாவளி கொண்டாட்டமானது பிரித்தானியாவின் அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க கலாசார தருணத்தைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியம்
சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியாவில் முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுன் தீபாவளி பண்டிகைகளை தொடங்கி வைத்தமையின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் முகமாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொண்டாட்டமானது இந்து, ஜெயின் மற்றும் சீக்கிய சமூகங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட முக்கிய நபர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தீபாவளி தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்ட இந்த கொண்டாட்டமானது, கலாசார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறிப்பிடத்தக்க கூட்டமாக அமைந்துள்ளது.
இதன்போது, கெய்ர் ஸ்டார்மர், பிரித்தானியா முழுவதும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். இது ஒன்றுகூடும் நேரம், இருளை எப்பொழுதும் வெல்லும் ஒளியில் நம் கண்களை நிலைநிறுத்துவதற்கான தருணம் இது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |