சந்நிதியான் ஆச்சிரமத்தில் பல இலட்சம் பெறுமதியான உதவி வழங்கல் நிகழ்வு
யாழ்ப்பாணம்- வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் நடாத்தப்படும் நிகழ்வில் தெய்வீக இன்னிசை விருந்தும், பல இலட்சம் பெறுமதியான உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வானது சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இராமநாதன் நுண்கலைக் கல்லூரியின் அரங்காற்றுகை மாணவி செல்வி உதயகுமார் சாலினியின் இன்னிசைக் கச்சேரி இடம் பெற்றது.
இன்னிசை நிகழ்வு
இதில் ஹார்மோனியம் இசையினை இசைக்கலாமணி நடேசு செல்வச்சந்திரன், மிருதங்க இசையினை கலாவித்தகர் க.சிவகுமார் தபேலா இசையினை வித்துவான் பிரபா அணிசெய் கலைஞர்களாக இணைந்திருந்தனர்.
இதில் உதவிகளாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் கோரிக்கைக்கு அமைவாக கிராம மட்ட சிறுவர் விளையாட்டு நிகழ்வுகளுக்காக ரூபா 50,000 பெறுமதியான் பரிசுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், பட்டியோலை, சுன்னாகத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு மருத்துவச் செலவிற்காக ரூபா 50,000 நிதியும், வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பெறுமதியான உணவுப் பொருட்கள்
இதேவேளை கடந்த 09/02/2025 அன்று அம்பாறை திருக்கோவில், விநாயகபுரம் ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு ரூபா 300,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் அம்பாறை உமிரி பிரதேசத்தில் அமைந்துள்ள காயத்திரி அம்மன் ஆலய கட்டுமானப் பணிகளுக்காக ரூபா 100,000 நிதியும் நிர்வாகத்திடம் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சதனை தமிழன் கலாநிதி மோகனதாஸால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், திருப்பதி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






