அர்ச்சுனா எம்பியை கைது செய்வது தொடர்பில் சந்திரசேகர் வெளியிட்ட தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய விடயம் குறித்து பொலிஸார் தான் தீர்மானம் எடுக்க வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) குறிப்பிட்டுள்ளார்.
இன்று (14.02.2025) யாழில் 2025ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன் போது, ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், நபர் ஒருவர் மீது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தாக்குதல் நடத்துவது பதிவாகிய காணொளி ஒன்று வெளியாகியிருந்தது.
அது தொடர்பில் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்காது, தேசிய மக்கள் சக்தி அவரை காப்பாற்றுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
எனவே, இந்த விடயம் குறித்து வினவிய போது அமைச்சர் சந்திரசேகர் மேலும் கூறியுள்ளதாவது,
மேலும், அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டத்தை மாற்றி சீனாவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ வழங்கும் எண்ணம் அரசாங்கத்திறகு இல்லை எனவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)