வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027 தொடர்பில் கலந்துரையாடல்

Jaffna Nagalingam Vedanayagam
By Thevanthan Oct 14, 2026 11:08 AM GMT
Report

வட மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களையும் சேவைகளையும் சர்வதேசச் சந்தைகளுடன் இணைத்து, உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், 'வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027' அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20, 21ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டைச் சிறப்பாக முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (13.10.2026) செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கை முகாமைத்துவக் கழகத்தின் ஏற்பாட்டில், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் தலைமையில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது.

வடக்கு மாகாணத்தில் காணப்படும் உற்பத்தி வளங்கள்

இதனை முன்னெடுப்பதில் ஆளுநர் செயலகம், மாகாண சபை மற்றும் மாவட்டச் செயலகங்கள் இணைந்து செயற்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் காணப்படும் உற்பத்தி வளங்களைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, அவற்றுக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்துவதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரை வெளிநாட்டுக் கொள்வனவாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன் நேரடியாக இணைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027 தொடர்பில் கலந்துரையாடல் | Discussion Regard Northern Exporters Conference

விவசாயம், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், பனைசார் உற்பத்திகள், கடற்றொழில் மற்றும் கடலுணவுப் பொருட்கள், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இயற்கை நலவாழ்வுப் பொருட்கள், சுகாதார உபகரணங்கள், சுற்றுலா, மரபுரிமை மற்றும் பண்பாட்டுத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இம்மாநாட்டில் முக்கியத்துவம் பெறவுள்ளன.

இத்துறைகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் தமது பொருட்களையும் சேவைகளையும் அறிமுகப்படுத்துவதற்கும், புதிய சந்தைகளைக் கண்டறிவதற்கும், வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் மாநாடு வழிவகுக்கும். குறிப்பாக, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுச் சந்தைகளையும், ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள புலம்பெயர் வர்த்தக வலையமைப்புகளையும் பயன்படுத்தி, வடக்கு மாகாண உற்பத்தியாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

நேரடி வர்த்தகச் சந்திப்பு

இம்மாநாட்டின் ஊடாக 50க்கும் மேற்பட்ட நேரடி வர்த்தகச் சந்திப்புகளை ஏற்பாடு செய்வது இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்கள் தமது பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் வெளிநாட்டுக் கொள்வனவாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடவும், புதிய விற்பனைத் தொடர்புகளை ஏற்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், வணிக விரிவாக்கத்துக்குத் தேவையான நிதி உதவிகள் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027 தொடர்பில் கலந்துரையாடல் | Discussion Regard Northern Exporters Conference

ஏற்றுமதிக்கான சர்வதேசச் சந்தை நிலவரங்கள், வெளிநாட்டு வர்த்தக விதிமுறைகள், தரச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான வழிமுறைகள், ஏற்றுமதிக்கான நிதி மற்றும் காப்புறுதி, பொருட்களைக் குறித்த காலத்தில் பாதுகாப்பாகச் சந்தைகளுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான போக்குவரத்து மற்றும் விநியோக ஏற்பாடுகள் தொடர்பிலும் உற்பத்தியாளர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன.

இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது பொருட்களின் தரத்தை மேம்படுத்தி, ஏற்றுமதிக்குத் தயாராகும் வாய்ப்பைப் பெறுவர். இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் முதல் நாளில் சந்தை வாய்ப்புகள் தொடர்பான அமர்வுகளும், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான அறிமுகங்களும் இடம்பெறவுள்ளன. இரு நாள்களிலும் வர்த்தகக் கண்காட்சிகளும் நேரடி வர்த்தகச் சந்திப்புகளும் நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் நாளில் வர்த்தகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முயற்சி வெறுமனே ஒரு கண்காட்சியுடன் மட்டுப்படுத்தப்படாமல், வடக்கு மாகாணத்தின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், ஏற்றுமதித் துறையை விரிவுபடுத்தவும், பிராந்தியத்தில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் உதவும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ளது. நீண்டகாலத்தில் நிரந்தரக் கண்காட்சி மற்றும் வர்த்தகத் தளமொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் இந்த முயற்சி முன்னிலைப்படுத்துகிறது என இன்றைய கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது. விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் இலங்கை முகாமைத்துவக் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027 தொடர்பில் கலந்துரையாடல் | Discussion Regard Northern Exporters Conference

ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு - கசிந்துள்ள தகவல்

ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு - கசிந்துள்ள தகவல்

வீட்டில் தனிமையில் இருந்த இளம் யுவதி சடலமாக மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை

வீட்டில் தனிமையில் இருந்த இளம் யுவதி சடலமாக மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US