திருகோணமலை மாவட்டத்தில் டெங்குநோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்
டெங்குநோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று திருகோணமலை (Trincomalee) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டமானது, நேற்று (21) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சியின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
உடனடி நடவடிக்கைகள்
டெங்கு சம்பந்தமாக தற்போதைய சூழ்நிலையின் தீவிரம் குறித்தும், மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாக இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் (NDCU) சில நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்த பரிந்துரைக்கப்பட்டன.
எனவே, இந்தச் செயற்பாடுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
கடந்த வாரம் டாப் இடத்தில் வந்த அய்யனார் துணை இந்த வார நிலைமை... டாப் சீரியல்களின் டிஆர்பி விவரம் Cineulagam