பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றப்பட்ட 10 கிலோகிராம் நீர்க்கட்டி
பெண்ணொருவரின் கருப்பையில் இருந்து 10 கிலோ கிராம் எடையுள்ள கட்டியை அகற்றும் சத்திரசிகிச்சை ஒன்று கதிர்காமம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கதிர்காமத்தில் வசிக்கும் 40 வயதுடைய பெண் ஒருவர் உணவு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் காரணமாக மருத்துவ ஆலோசனையை நாடியதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முடிவு எடுக்கப்பட்டது.
உயிரணுக்களின் வளர்ச்சி
இந்தநிலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண், தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக மகப்பேற்று வைத்திய நிபுணர் சமந்தா சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
கருப்பையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியே நீர்க்கட்டிகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கிறது.
மேலும் வயிறுப் பகுதியில் ஏற்படும் அசௌகரியம் உட்பட்ட அறிகுறிகளை புறக்கணிப்பது நோயாளியின் உயிருக்கு ஆபத்தானது என்று அவர் கூறியுள்ளார்.