எதிரிகளால் வெற்றி கொள்ளப்பட்டுள்ள தமிழ்தேசிய இன விடுதலைப் போராட்டம்
தமிழ்த் தேசிய இனம் இன்று பெருமளவு சீரழிவுக்கு உள்ளாகியுள்ளதாக அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இன்றைய சூழலில் தமிழ்தேசிய இனத்தை நூறு வீதம் மீள் கட்டமைப்பு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் சித்தார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழ்தேசிய இன விடுதலைப்போராட்டமானது இன்று எதிரிகளினால் வெற்றி கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதனை நாம் மீறி வெற்றி கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி.....