முல்லைத்தீவில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேனஇன்றைய தினம்(30) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டார்.
இதன் ஓர் அங்கமாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் ஒழுங்கமைப்பிலும் பிரதி அமைச்சரின் தலைமையிலும் விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலக அரியாத்தை மண்டபத்தில் மு.ப 11.30 மணிக்கு நடைபெற்றது.
கலந்துரையாடல்
மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சர் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

குறித்த கலந்துரையாடலானது முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வீதி அபிவிருத்திகள் தொடர்பிலும் பொதுப் போக்குவரத்து மற்றும் நகரமயமாக்கல் தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
தொடர்ந்து எதிர்காலத்தில் மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி தேவைகள்,போக்குவரத்து தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.





கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 3 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri