அரை மணி நேரம் அநுர மனோவுடன் கதைத்தது என்ன..! அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு
அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அநுர குமார திஸாநாயக்கவுடன் வழக்கமாக அரை மணி நேரம் உரையாடுவது வழக்கம். அனோஜனின் நிலைப்பாட்டையும் எடுத்துரைத்துள்ளேன்.
விரைவில் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு, அவரது தண்டனையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் ஜனாதிபதிக்கு வலியுறுத்தினேன்.
ஊழல்வாதிகளை அநுர அரசாங்கம் தேடித் தேடி கைது செய்வது பாராட்டுக்குரியது. என்றாலும், அநுர அரசாங்கத்திலும் ஊழல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தகுந்த தண்டனை வழங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.