சிதைக்கப்பட்ட குடியிருப்புகள்; பிணங்களை மீட்க முடியாமல் தவிப்பு: உக்ரைனில் பயங்கரம்: செய்திகளின் தொகுப்பு
உக்ரைனின் மரியுபோல் நகரம் ரஷ்யத் துருப்புகளால் மொத்தமாகச் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பு கட்டிடங்களிலிருந்து இதுவரை பிணங்களை மீட்க முடியாமல் அதிகாரிகளும் உறவினர்களும் தவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தலைநகரை இரண்டு நாட்களுக்குள் கைப்பற்றுவதாகக் களமிறங்கிய ரஷ்யத் துருப்புகள் 24 நாட்களாகப் போரிட்டு வருகின்றனர். தலைநகர் கீவ்வை கைப்பற்ற முடியாமல் போன ஆத்திரத்தில் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்யத் துருப்புகள் சின்னாபின்னமாக்கியுள்ளது.
வரைபடத்திலிருந்தே மொத்தமாக அழிக்கப்பட்ட நிலையில் சிதைந்துள்ளது மரியுபோல் நகரம். தற்போது, அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து, ரஷ்யத் தாக்குதலில் சிக்கிப் பலியான உடல்களை இதுவரை மீட்க முடியாமல் உறவினர்களும் அதிகாரிகளும் தவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
