அமெரிக்காவுடன் இணைந்து ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்
அமெரிக்காவின் உதவியோடு ரஷ்ய ஆயுத கிடங்கை உக்ரைன் மொத்தமாக அழித்து தரைமட்டமாக்கியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தாக்குதல் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த தாக்குதலில் உக்ரைனின் பல இடங்கள் நாசமாக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கு பல நாடுகளும் உக்ரைனுக்கு உதவி வருகின்றன.
அந்த வகையில், அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைன் இச் சம்பவத்தை செய்துள்ளது.அதாவது அமெரிக்காவின் உதவியுடன் உக்ரேனிய ராட்சச M777 ரக பீரங்கியை கொண்டு ஒரு அழகான ரஷ்ய கிடங்கை அழித்துள்ளது.
பாம்பு தீவை தாக்கியதாக உக்ரைன் அறிவிப்பு
இதனிடையே, கருங்கடலில் உள்ள பாம்பு தீவை தாக்கியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் ரஷ்ய படைகளுக்கு குறிப்பிடத்தக்க இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உக்ரேனியப் படைகள் 2,500 கிலோ மீற்றர் நீளமான போர்முனையில் போரை எதிர்கொள்கின்றன, ஆனால் நிலைமை குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலில் பல்வேறு இடங்களில் உக்ரைன் வீரர்களைக் காட்டும் தொடர் படங்களைப் அவர் பகிர்ந்துள்ளார்.
உக்ரேனிய மற்றும் ஆங்கிலத்தில் பகிரப்பட்ட அவரது செய்தியில், "நாங்கள் முழுமையான தீமையைக் கையாளுகிறோம். மேலும் முன்னேறுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. "எங்கள் முழு நிலப்பரப்பையும் விடுவிக்கவும்.
எங்கள் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றவும் போராடுகின்றோம். மேலும், மூலோபாய முயற்சி இன்னும் நம்முடையது என்று தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.