ரஷ்யாவை கைவிட்ட மேற்குலக நாடுகள் - நேசகரம் நீட்டிய சீனா
சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தராக ரஷ்யா மாறியுள்ளதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதிக்கு மேற்குலக நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், சீனாவுக்கு கச்சா எண்ணெயை தள்ளுபடியில் விற்க ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடான சவுதி அரேபியாவை விட, ரஷ்யாவின் அதிக எண்ணெய்யை சீனா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், ரஷ்யா சீனாவிற்கு கச்சா எண்ணெயை சிறப்பு தள்ளுபடிக்கு உட்பட்டு வழங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக சீனா கருதப்படுகிறது.
கோவிட் கட்டுப்பாடுகள் மற்றும் மந்தமான பொருளாதாரம் ஆகியவற்றால் தேவை குறைந்துவிட்ட போதிலும் சீனா ரஷ்ய எண்ணெயை வாங்குவதை அதிகரித்தது.
எண்ணெயை வாங்குவதை அதிகரித்த சீனா
மாநில சுத்திகரிப்பு நிறுவனமான சினோபெக் மற்றும் அரசு நடத்தும் ஜென்ஹுவா எண்ணெய் உட்பட சீன நிறுவனங்கள், சமீபத்திய மாதங்களில் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில், அமெரிக்காவும் பிரித்தானியாவும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தடைவிதிப்பதாக அறிவித்தது. அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எரிவாயு இறக்குமதியை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து சீனா அதிகளவாக எண்ணெய் இறக்குமதியை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் இரண்டாவது பெரிய நாடாக ரஷ்யா மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மீண்டும் பதின்மூன்றா....! 7 மணி நேரம் முன்

தொகுப்பாளினி டிடியின் மறுமணம் பற்றி முதன்முறையாக கூறிய அவரது அக்கா பிரியதர்ஷினி- என்ன கூறினார் தெரியுமா? Cineulagam

வெளிநாட்டு வேலைக்கு போக பாஸ்போர்ட் வேண்டும்! இலங்கை தமிழ்ப்பெண் கோரிக்கைக்கு கிடைத்த பதில் News Lankasri

பெட்ரோல் நிலையத்தில் கிடந்த 'ஆண் குறி'! அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்.. பின்னர் தெரிய வந்த உண்மை News Lankasri

பிரித்தானியாவுக்குள் கால் வைத்தால் கைது, நாடுகடத்தல்தான்: சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ரிஷி எச்சரிக்கை... News Lankasri
