தேசபந்துவின் சொத்துக்களை வைத்திருக்கும் மர்ம நபர் யார்!
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக பல்வேறு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் அவரது சொத்துக்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுகின்றன.
குறிப்பாக சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்திய பி அறிக்கையில், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் கூட இல்லை என்பதும், அவரது பெயரில் எந்த ஒரு சொத்து பதிவும் செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
எட்டு சொகுசு வீடுகள்
சொத்துக்கள் பற்றிய குற்றச்சாட்டுகளில் தேசபந்து தென்னகோன் எட்டு சொகுசு வீடுகளை வைத்திருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த வீடுகளில் ஒன்று பொரளையில் உள்ள வனாத்தமுல்லே சூப்பர் வீடமைப்பு வளாகத்தில் அமைந்துள்ளது. மற்றொரு வீடு கண்டி அம்பிட்டியவில் அமைந்துள்ளது.
தேசபந்து தென்னகோன், தலவதுகொட, ஹோகந்தர, பகுதியில் ஒரு ஆடம்பரமான வீட்டையும் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது சமீபத்தில் பொலிஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இருப்பினும், வாக்காளர் இடாப்பில் தேசபந்து தென்னகோனின் பெயருக்கு முகவரி இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த தந்திரோபாயம் அவரது சொத்துக்களை மறைத்து இரகசியமாக செயல்பட பயன்படுத்தப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
தேசபந்துவின் சொத்துக்கள்
அப்படியென்றால் தேசபந்துவின் சொத்துக்கள் யாரால் பாதுகாக்கப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது.
தேசபந்து தென்னகோனின் சொத்துக்களில் பெரும் பகுதி காலியைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் இருப்பதாக மேற்குறிப்பிட்ட சில தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த மர்ம நபர், காலியில் உள்ள முக்கிய பௌத்த தேவாலயமொன்றின் தேரர் என மேற்படி ஊடக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, தேசபந்துவின், தலவதுகொட, ஹோகந்தர பகுதியில் அமைந்துள்ள நிலமும் ஆடம்பரமான வீடும் இந்த தேரரின் பெயரில் இருப்பதாகவும், அவை தேசபந்து தென்னகோனின் மறைக்கப்பட்ட சொத்துக்களில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
காலி பகுதியை சேர்ந்த குறித்த தேரர் ஏராளமான அசையா மற்றும் அசையும் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தேசபந்து தென்னகோனின் சொத்துக்கள் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள சந்தேகங்களை முறையாக விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri
