விரலில் வித்தை காட்டிய எலான் மஸ்க்: அதிகமாக பகிரப்படும் காணொளி
ஸ்பேக்ஸ் எக்ஸ்(X), டெஸ்லா(Tesla) மோட்டார்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் நிகழ்த்திய சாகச காணொளியொன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், எலான் மஸ்க்(Elon Musk) முதலிய முக்கிய பிரமுகர்கள் அமெரிக்காவில் உள்ள நட்சத்திர உணவகத்தில் இரவு விருந்துக்கு சென்றுள்ளனர்.
எலான் மஸ்க்
அந்த இரவு விருந்துக்கு ஒரு இருக்கைக்கு அமெரிக்க டொலர் மதிப்பில் 1 மில்லியன் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Elon Musk effortlessly balances a fork and spoon on one finger while dining with Trump. Peak genius and dinner entertainment 😂🍴 pic.twitter.com/1kypBcCVQT
— SMX 🇺🇸 (@iam_smx) March 22, 2025
இந்த விருந்து நிகழ்ச்சியில் எலான் மஸ்க் தனது சுண்டு விரலில் 2 கரண்டிகள் மற்றும் ஒரு ஃபோர்க்கை கொண்டு சாகசம் செய்துள்ளார்.
அதாவது, 2 கரண்டிகள் மற்றும் ஒரு ஃபோர்க்கை தனது சுண்டு விரலில் நிறுத்தியிருக்கிறார்.
இரவு விருந்துக்கான நோக்கம்
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. இந்த இரவு விருந்துக்கான நோக்கம் பற்றி வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
என்றாலும் கூட விருந்துக்கான அழைப்பிதழில் MAGA INC என்ற தலைப்பு இடம்பெற்றிருந்தாக கூறப்படுகிறது.
இந்த இரவு விருந்தில் டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) சிறப்பு விருந்தினராக மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan
