இலக்கு வைக்கப்பட்ட நெதன்யாகு! தலைமை அதிகாரி சாச்சி பிரேவர்மேன் பலி என அறிவிப்பு
புதிய இணைப்பு
நெதன்யாகுவின் தலைமை அதிகாரி சாச்சி பிரேவர்மேன் கொல்லப்பட்டதாக ஈரானிய இராணுவ கண்காணிப்பு தெரிவித்துள்ளது.
இன்று டெல் அவிவில் உள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தை தாக்கியதாக ஈரானிய புரட்சிகர காவற்படை அறிவித்தது.
இந்நிலையில், சற்று முன்னர் வெளியான ஈரானிய இராணுவ கண்காணிப்பின் எக்ஸ் பதிவில் நெதன்யாகுவின் தலைமை அதிகாரி சாச்சி பிரேவர்மேன் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Netanyahu's chief of staff, Tzachi Braverman, has been killed: report
— Iran Military Monitor (@IRIran_Military) March 2, 2026
முதலாம் இணைப்பு
இன்று டெல் அவிவில் உள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தை தாக்கியதாக ஈரானிய புரட்சிகர காவற்படை அறிவித்துள்ளது.
அதேநேரம், ஹைஃபாவில் உள்ள பாதுகாப்பு மற்றும் இராணுவ மையங்களையும், கிழக்கு ஜெருசலேம், இஸ்ரேலிய விமானப்படைத் தலைமையகம் ஆகியவற்றை குறிவைத்ததாக IRGC குறிப்பிட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் புரட்சிகர காவற்படை (IRGC) வெளியிட்டுள்ள தகவலின் படி, குறித்த இலக்குகளை நோக்கி கைபர் (Kheibar) ரக ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.