மட்டக்களப்பில் மலசலகூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்த உரிமையாளருக்கு சிறைத்தண்டனை
மட்டக்களப்பு - செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசலகூடத்தில் வைத்து உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 60 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் நேற்று இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவதினமான நேற்று பொது சுகாதார பரிசோதகர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
உணவக உரிமையாளர் கைது
இதன்போது ஒரு உணவகத்தில் மலசலகூடத்தில் உணவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்துவந்ததை கண்டுபிடித்து அந்த உணவக உரிமையாளரை கைது செய்தனர்.

இதனையடுத்து குறித்த உணவக உரிமையாளர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை ஒரு மாதகாலம் சிறையில் அடைக்குமாறும் 60 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகில் வீதி ஓரத்தில் கொள்கலனில் அமைக்கப்பட்டுள்ள இரு உணவகங்களில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam