AI தொழில்நுட்பத்தை நோக்கி இலங்கை விரைவாக நகர்கிறது: IMF தகவல்
இலங்கை எதிர்பார்ப்பதை விடவும் மிக விரைவாக செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைமைத் தகவல் அதிகாரியும் தகவல் தொழில்நுட்பத் திணைக்களத்தின் பணிப்பாளருமான ஷிரின் ஹமீத் (Shirin Hamid) தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் 76வது ஆண்டு நிறைவு சொற்பொழிவில் உரையாற்றியபோதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
IMF தகவல்
இலங்கை தனது பொருளாதார மீட்சியின் ஒரு பகுதியாக டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது சில்லறை வர்த்தகப் பரிமாற்றங்களில் 70% இற்கும் அதிகமானவை தற்போது மின்னணு நிதிப் பரிமாற்றம் (Electronic Fund Transfer) மூலம் நடைபெறுகின்றன அரசின் வருவாயில் 60% இற்கும் அதிகமானவை டிஜிட்டல் முறையிலேயே திரட்டப்படுகின்றன.

நாட்டின் டிஜிட்டல் எழுத்தறிவு வீதம் 72% ஆக உள்ளது தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை முறைமை மற்றும் தரவுப் பரிமாற்றத் தளங்களை (Data Exchange Platform) உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
- பழைய தொழில்நுட்ப அமைப்புகளின் சுமை இல்லாததால், இலங்கை போன்ற சிறிய நாடுகள் புதிய நவீன AI தொழில்நுட்பங்களை விரைவாகச் சுவீகரித்துக்கொள்ள (Leapfrogging) பெரிய வாய்ப்பு உள்ளதாகவும், எனினும் இதன் அபாயங்களைக் கருத்திற்கொண்டு கவனமாகக் கையாள வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.