பிரித்தானிய தடையின் பின் சர்வதேச நீதிமன்றத்தில் சிக்கப் போகும் இலங்கையின் முக்கிய புள்ளிகள்!
இலங்கையில் உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக கருதப்படும் நபர்களுக்கு இங்கிலாந்து நேற்று தடை விதித்தது.
இதன்படி இலங்கையின் முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் இலங்கை இராணுவத்தின் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயல்பட்ட துணை இராணுவப் படையான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குழுவைத் தலைமை தாங்கிய முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவத் தளபதி ஆகியோர் இங்கிலாந்தால் தடைசெய்யப்பட்ட நபர்களாக தெரிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த நால்வருக்கான தடைகள் இலங்கை அரசியலில் இன்று பேசுபொருளாக மாற்றியுள்ளது.
இந்த தடைகளை சில அரசியல்வாதிகள் ஆதரிக்கும் அதேசமயம் பல எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றிற்கு அப்பால் பிரித்தானிய தடையின் பின் சர்வதேச நீதிமன்றத்தில் சிக்கப் போகும் இலங்கையின் முக்கிய புள்ளிகள் குறித்து பிரித்தானிய தொழிற்கட்சி தமிழ் பிரிவுத் தலைவர் சென்.கந்தையா தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ள முழுமையான கருத்துக்களை காணலாம்...,
