விகாரையொன்றிற்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விகாராதிபதி
அனுராதப்புரம் - எப்பாவல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிரலோகம பகுதியில் உள்ள விகாரையொன்றிற்குள் விகாராதிபதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமானது பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
குறித்த மதகுருவின் உடலை இன்று (25) மதியம் விகாரைக்குள் இருந்து மீட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
எப்பாவல பொலிஸார், அவரது உடல் சிதைந்திருந்ததால் சில நாட்களுக்கு முன்பு கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
விகாணையின் விகாராதிபதி
குறித்த விகாணையின் விகாராதிபதியாக பணியாற்றிய விலாச்சியே பிரேமரதன தேரரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில், விகாராதிபதி இந்த கோவிலில் தனியாக வேலை செய்து வாழ்ந்து வருவதாகவும், கிராம மக்களுடன் தொடர்பில் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இன்று மதியம் அவரை காண்பதற்கான மதகுரு ஒருவர் வாகாரைக்கு வந்தபோது, ஒரு நாற்காலியில் அவர் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த மதகுரு கிராமசேவகர் மற்றும் கிராம மக்கள் மூலம் இது குறித்து தகவல் அளித்துள்ளார்.
எப்பாவல பொலிஸார்
அதன்படி, எப்பாவல பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையில், கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விஹாராதிபதி தேரரின் அடையாள அட்டை உள்ளிட்ட சில ஆவணங்கள் கோயிலில் இருந்து சுமார் 02 கி.மீ தொலைவில் உள்ள ஒரு இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், கோயிலுக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியும் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மூன்று ஜோடி காலணிகள் மற்றும் ஒரு கத்தி ஆகியவை மேலதிக விசாரணைக்காக பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
தம்புத்தேகம பதில் நீதவான் சம்பவ இடத்திலேயே விசாரணை நடத்திய பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக சடலத்தை அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ பரிசோதகரிடம் ஒப்படைக்குமாறு எப்பாவல பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
