உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! வர்த்தகர் இப்ராஹிமுக்கு எதிரான சாட்சி வெளிநாடு பயணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான வர்த்தகர் இப்ராஹிமுக்கு எதிரான சாட்சி, வௌிநாடு சென்றுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் தற்கொலைக் குண்டுதாரிகளில் இன்ஷாப் இப்ராஹிம், இல்ஹாம் இப்ராஹிம் ஆகியோரின் தகப்பனாரான வர்த்தகர் முஹம்மத் இப்ராஹிம் வீட்டில் பணியாற்றிய பணிப்பெண், அவருக்கு எதிரான முக்கிய சாட்சியாக பெயரிடப்பட்டிருந்தார்.
வழக்கு விசாரணை
இந்நிலையில் குறித்த பணிப்பெண் இப்போதைக்கு வௌிநாடு சென்றுள்ளதாக பொலிசார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான இன்னுமொரு பெண்ணும் வௌிநாடு செல்லும் நிலையில் இருப்பதாகவும் இதன்போது மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வெளிநாடு சென்றுள்ள பெண் இன்றி வர்த்தகர் இப்ராஹிமுக்கு எதிரான வழக்கை முன்கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக எதிர்வரும் ஜூலை மாதம் 02ம் திகதி வரை வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri
