2025 இல் முதல் இரண்டு மாதங்களில் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
2025 பெப்ரவரி மாதத்தில் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் வளர்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் மாதத்தில் மொத்த ஏற்றுமதி, பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து 1,382.53 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பெப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 2.58% மாதாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
வளர்ச்சி
மேலும், இது 2024 பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 4.62% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 பெப்ரவரி மாதத்தில் பொருட்களின் ஏற்றுமதியின் மதிப்பு 1,056.39 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
2025 பெப்ரவரி மாதத்தில் சேவைகளின் ஏற்றுமதி 326.14 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.இது 2024 இன் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 24.37% வளர்ச்சியைக் காட்டுகிறது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தற்காலிக தரவுகள் மற்றும் இரத்தினக் கற்கள், நகைகள் மற்றும் கனிம எண்ணெய்ப் பொருட்கள் ஆகியவற்றிற்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களின் படி இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்றுமதியின் மதிப்பு
2025 பெப்ரவரி மாதத்தில் பொருட்களின் ஏற்றுமதியின் மதிப்பு 1,056.39 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
2025 பெப்ரவரி மாதத்தில் சேவைகளின் ஏற்றுமதி 326.14 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 இன் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 24.37% வளர்ச்சியைக் காட்டுகிறது.
2025 இன் முதல் இரண்டு மாதங்களில் பொருட்களின் ஏற்றுமதி 3.9% அதிகரித்து 2,109.19 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சேவைகளின் ஏற்றுமதியின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 17.2% அதிகரித்து 621.14 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 3 நாட்கள் முன்

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri
