பிரதி மதுவரி ஆணையாளராக தங்கராஜாவுக்கு பதவி உயர்வு
இலங்கை மதுவரித்திணைக்களத்தின் பிரதி மதுவரி ஆணையாளராக மட்டக்களப்பினை சேர்ந்த சண்முகம் தங்கராஜா பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கொழும்பு மதுவரி திணைக்கள தலைமைக் காரியாலத்தில் இன்று (21.03.2024) அவருக்கு பதிவு உயர்வு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளராக கடமையாற்றி வரும் நிலையிலே அவருக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக செயற்பாட்டாளர்
மட்டக்களப்பு பெரியகல்லாறை சேர்ந்த இவர் 1991ஆம் ஆண்டு மதுவரித்திணைக்களத்தின் மதுவரி பரிசோதகராக இணைந்துகொண்டுள்ளதோடு, மதுவரித் திணைக்கள சிரேஸ்ட பரிசோதகராகவும், மதுவரி அத்தியட்சகராகவும் பதவியுயர்வு பெற்று தற்போது கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளராக கடமையாற்றிவரும் நிலையில் இந்த பதவி உயர்வை பெற்றுள்ளார்.

மேலும் இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பொது அமைப்புகள் ஊடாக சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதுடன் கலை கலாச்சார வளர்ச்சிக்கும் பங்களிப்பினை வழங்கிவருவதாகவும் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri