மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
சிறியரக மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சகல ரக மோட்டார் சைக்கிள்களையும் பதிவுசெய்யுமாறு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் பயன்பாட்டிலுள்ள மோட்டார் சைக்கிள்கள் உட்பட அனைத்து வகையான மோட்டார் வாகனங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
நாட்டின் பொது வீதிகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் பதிவு நடைமுறை அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
நாற்பத்து எட்டு சிலிண்டர் திறன் (48 CC) கொண்ட சிறிய மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்யத் தேவையில்லை என சில விற்பனையாளர்கள் கூறி வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள திணைக்களம், அது முற்றிலும் தவறான கூற்று எனக் குறிப்பிட்டுள்ளது.

முறையான பதிவின்றி பொது வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக பொலிஸாரால் அபராதம் விதிக்கப்படும் என்றும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் வெடித்துள்ளப் போராட்டங்களின் உண்மையானப் பின்னணி: ட்ரம்ப் வைக்கும் குற்றச்சாட்டு News Lankasri
திருமணம் செய்ய ராஷ்மிகா 100 முறை கெஞ்சினார்.. விஜய் தேவரகொண்டா பேச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Cineulagam