கிளிநொச்சியில் வீட்டுத்திட்டம் கோரிய பெண்ணுக்கு அவலம் - கிராம அலுவலருக்கு எதிராக சிக்கிய ஆதாரங்கள்
கிளிநொச்சி - புளியம்பொக்கணை பகுதியில் கணவனின் துணையில்லாமல் வாழ்ந்து வரும் பெண்ணிடம் கிராம அலுவலர் தனது பணியைத் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் நடந்துகொண்ட விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புளியம்பொக்கணை பகுதியில் கடந்த மூன்று வருடங்களாகக் கணவனைப் பிரிந்து, பெண்ணொருவர் தனது பிள்ளையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
கிராம அலுவலகர் மீதான முறைப்பாடு
இதுதொடர்பான வழக்கு கடந்த மூன்று வருடங்களாக நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலால் அவர்கள் இருந்த வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், குறித்த பெண் தனது பிள்ளையுடன் தற்காலிகமாகக் கொடுக்கப்பட்ட வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 மில்லியன் ரூபாய் வீட்டுத் திட்டத்திற்கு அனுமதி கோரி அப்பகுதியைச் சேர்ந்த கிராம அலுவலரிடம் கடிதங்களைக் கொடுத்துள்ளார்.
அவர் தனது பணியைச் செய்யாமல் குறித்த பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்துள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
கணவரிடம் இருந்து கிடைத்த ஆதாரங்கள்
இதற்கமைய, கணவன் தனது மனைவிக்கு வீடு கிடைக்கக் கூடாது என நினைப்பது போன்ற கடிதத்தை கிராம அலுவலரே தயார் செய்து, குறித்த பெண்ணின் கணவருக்கு அனுப்பிக் கையொப்பமிட்டுக் கேட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த பெண்ணின் கணவர் தனது பிள்ளைக்கும் மனைவிக்கும் குறித்த வீட்டுத் திட்டம் கிடைக்க வேண்டும் என்று கடிதமொன்றை எழுதி, கையொப்பமிட்டு கிராம அலுவலருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், குறித்த கிராம அலுவலர் தனது பணியைத் துஷ்பிரயோகம் செய்து வருகின்றார் என்பது தெளிவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த பெண் மகளிர் விவகார அமைச்சு மற்றும் உயர் அதிகாரிகளுக்குக் குறித்த கிராம அலுவலர் மீது முறைப்பாடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Sudaron அவரால் எழுதப்பட்டு, 22 October, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி News Lankasri
எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலர் இதோ Cineulagam
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan