யாழில் 22 நாட்களாக காணாமல்போயுள்ள இளம் பெண் - தேடி அலையும் தாய்
யாழ்ப்பாணத்தின் புறநகர் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த இளம் பெண் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இறுதியாக நின்றதாகவும், அதன் பின்னர் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றும் தாயார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
தனது மகளை கண்டுபிடித்து தருமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

இந்நிலையில், மகள் காணாமல்போய் 22 நாட்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என தாய் கவலை வெளியிட்டுள்ளார்.
மகளுக்கு என்ன நடந்தது? அவர் எங்கிருக்கிறார்? என்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமல், தனது மகள் மீண்டும் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் தாய் தேடி அலைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல்போன இளம் பெண் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, அவரை கண்டுபிடிக்க பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி News Lankasri
எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலர் இதோ Cineulagam