அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 43 சிறுவர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு காய்ச்சல்
2 நாட்களுக்கு தொடர்ச்சியாக காய்ச்சல், வாந்தி மற்றும் உடல் சோர்வு இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடி தேவையான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
6 மாவட்டங்களிலுள்ள 57 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதி அபாய நிலையில் இருப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தீவிரமடையும் டெங்கு
மேலும், 2023 இல் பதிவாகியிருந்த மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை வெளியான தகவல்களின் படி டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 35,075 ஆக பதிவாகியுள்ளது.
மேல் மாகாணம்
மொத்த நோய்த்தொற்றுகளில், கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறையில் முறையே 7,904, 7,348 மற்றும் 2,086 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்தின் மொத்த வழக்குகள் 17,338 ஆக உள்ளது, இது மாகாணங்களின் அடிப்படையில் அதிகபட்சமாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை 22பேர் உயிரிழப்பு
மேலும், புத்தளம் மாவட்டத்தில் 2,483 ஆக கணிசமான எண்ணிக்கையிலான வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மாவட்டங்களின் அடிப்படையில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், மே மாதத்தில், இதுவரை மொத்தம் 5,406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், அதிகரித்து வரும் டெங்கு நோய்த்தொற்றுகள் இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 22பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |