யாழ். கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல் - 09 பேருக்கு தண்டம் விதிப்பு
யாழ்ப்பாணம் - கரவெட்டி பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கரணவாய் பொதுச்சுகாதார பிரிவில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது நுளம்பு பெருகக் கூடியவாறான சூழலினை வைத்திருந்த 09 ஆதன உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கரணவாய் பொதுச்சுகாதார பரிசோதகரான சு.புவீந்திரனால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து ஆதன உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் ஆதன உரிமையாளர்களிற்கு மொத்தமாக 72ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri