மோசமான நிலை ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்

Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka Hospitals in Sri Lanka
By Rakesh Jun 19, 2026 07:57 AM GMT
Report

நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் டெங்கு கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அவற்றை முற்றாக அழிப்பதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது என்று நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்தார்.

தற்போது நிலவி வரும் விட்டு விட்டுப் பெய்யும் மழை காரணமாக டெங்கு நோய் மேலும் பரவும் அபாயம் காணப்படுவதால், ஜூன் 15 முதல் ஜூன் 20 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் பெண் சட்டத்தரணியொருவரின் மோசமான செயல் - சிசிடிவியில் பதிவான காட்சி

கொழும்பில் பெண் சட்டத்தரணியொருவரின் மோசமான செயல் - சிசிடிவியில் பதிவான காட்சி

ஒதுக்கப்பட்ட விசேட நாள்

இதன் ஒரு கட்டமாக, ஜூன் 18 ஆம் திகதியான வியாழக்கிழமை பாடசாலைகள், பிரிவேனாக்கள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சுத்தப்படுத்துவதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து மருத்துவ நிபுணர் பிரசிலா சமரவீர ஊடகங்களிடம் இன்று மேலும் தெரிவித்ததாவது,

மோசமான நிலை ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல் | Dengu Fever Urgent Warrning People

"இலங்கையில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் என்பன பரந்த நிலப்பரப்பைக் கொண்டவை என்பதால், அங்கு டெங்கு கொசுக்கள் பெருகும் இடங்கள் அதிகமாகக் காணப்படலாம்.

டெங்கு கொசுக்கள் முட்டையிடுவதற்கு வெறும் 5 மில்லிலீற்றர் அளவிலான மிக சிறிய நீர்நிலையே போதுமானது என்பதால், இது குறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

இதற்கமைய, பாடசாலை அதிபர்கள், டெங்கு ஒழிப்புக் குழுக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பாடசாலை வளாகங்களைச் சோதனையிட்டு, டெங்கு பெருகும் இடங்களை அகற்றும் விசேட நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

டெங்கு பெருகும் இடங்கள் அதிகரிப்பு

மழைக்காலங்களில் டெங்கு பெருகும் இடங்கள் அதிகரித்தாலும், மழை இல்லாத காலங்களிலும் இவ்வாறான இடங்கள் காணப்படலாம் என்பதால் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் வீடு, பணிபுரியும் நிறுவனம் மற்றும் பாடசாலை வளாகங்களைத் தொடர்ச்சியாகப் பரிசோதிக்க வேண்டும்.

பொதுவாக டெங்கு கொசுக்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியிலும், மாலை வேளையிலும் கடிக்கக்கூடும் என்றாலும், அவை கட்டட வளாகத்துக்குள் நுழைந்துவிட்டால் பகல் நேரங்களிலும் மனிதர்களைக் கடிக்க வாய்ப்புள்ளது.

மோசமான நிலை ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல் | Dengu Fever Urgent Warrning People

இலங்கையில் கடந்த 2017ஆம் ஆண்டிலேயே மிக அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். எனினும், தற்போதும் மாதமொன்றில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் 43 ஆயிரத்து 559 நோயாளர்களும், 27 மரணங்களும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவுக்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளன.

அதிகளவில் நோயாளர்கள் பதிவாகும் மாவட்டங்கள்

இந்த நோயாளர்கள் கொழும்பு, கம்பஹா, மாத்தறை, இரத்தினபுரி, காலி, கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலிருந்தே அதிகளவில் பதிவாகியுள்ளனர்.

தற்போது சில மாவட்டங்களில் மாத்திரமே இந்த பாதிப்பு அதிகமாகக் காணப்படுகின்றது. நாடு முழுவதும் இது ஒரு தொற்றுநோயாக இன்னும் மாறவில்லை.

மோசமான நிலை ஏற்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல் | Dengu Fever Urgent Warrning People

2017 ஆம் ஆண்டு போன்றதொரு மோசமான நிலை ஏற்படுவதைத் தடுக்கவே இந்தத் தீவிர நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்படுகின்றன. டெங்கு என்பது ஆரம்பத்திலேயே சரியாகக் கண்டறியப்பட்டால் மிக விரைவாகக் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயாகும்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். எனினும், சிலருக்கு நோய் குணமாகிய பின்னரும் அதிக சோர்வு காணப்படலாம். முறையான ஓய்வு எடுப்பதன் மூலம் இந்தச் சோர்வைக் குறைத்துக்கொள்ள முடியும். சில சந்தர்ப்பங்களில் இந்நோய் தீவிரமடைந்து, நுரையீரலில் நீர் கோர்க்கும் நிலையும் ஏற்படலாம் என்பதால், தன்னிச்சையாக மருந்துகளை உட்கொள்ளாது முறையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று, முழுமையான ஓய்வில் இருப்பதே மிக முக்கியமானது என்றார்.

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் வைத்தியர்! காதலன் தலைமறைவு - வெளியான தகவல்கள்

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் வைத்தியர்! காதலன் தலைமறைவு - வெளியான தகவல்கள்

திருகோணமலை கடற்படை தளத்தின் சித்திரவதை முகாமை பார்வையிட்ட நீதவான் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

திருகோணமலை கடற்படை தளத்தின் சித்திரவதை முகாமை பார்வையிட்ட நீதவான் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US