அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்
தெஹிவளை - சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இன்று (11) அதிகாலை 3.15 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கைக்கூண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள்
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த 55 வயதுடைய நபர் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகள் என பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.