தெஹிவளையில் வீடொன்றின் மீது குண்டுத்தாக்குதல்: இருவர் பலி - மற்றுமொருவர் வைத்தியசாலையில்
தெஹிவளை - கஹவதன சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (11) அதிகாலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 10 மற்றும் 14 வயதான இரண்டு சிறுவர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
10 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், 14 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் 52 வயதான தந்தை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைக்குண்டு தாக்குதலில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.