மிக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று விசாரணை
மிக் விமானக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த விசாரணைகளுக்காக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு கோட்டாபயவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றைய தினம் கோட்டாபய ராஜபக்சவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை நடத்த உள்ளது.
இன்று விசாரணை
கடந்த 2006 – 2007ம் ஆண்டு காலப்பகுதியில் நான்கு மிக்27 ரக தாக்குதல் விமானங்கள் கொள்வனவின் போது மோசடி இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடி, சட்டவிரோதமான முறையில் தரகு பெற்றுக்கொள்ளப்பட்டமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இந்த கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்ற காலத்தில் கோட்டாபய ராஜபக்ச நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26