வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை சனத்தொகை
இலங்கையின் சனத்தொகையில் 2023 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், புலம்பெயர்தல், பிறப்பு வீதங்கள் குறைதல் மற்றும் அதிகரித்த இறப்பு வீதங்கள் உள்ளிட்ட காரணங்களினாலயே சனத்தொகை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதன்படி 2022 இல் 2,181,0000 ஆக இருந்த மக்கள் தொகை 2023இல் 2,037,0000 ஆகக் குறைந்துள்ளது.
இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை
மேலும், புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 2022இல் 361,800 இல் இருந்து கடந்த ஆண்டு 268,920 ஆகக் குறைந்துள்ளதோடு வருடாந்த இறப்பு விகிதமும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 2014 இல் 125,334 வீதமாகவிருந்த இறப்பு வீதம் 2023 இல் 196,000 ஆக உயர்ந்துள்ளது.
2022 இல் 85,572 ஆக இருந்த நாட்டை விட்டு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2023 இல் 222,715 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |