யாழில் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைய முற்பட்ட மக்கள்! பொலிஸார் குவிப்பு
இலங்கை கடற்பரப்பினுள் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்றொழிலாளர்களின் தொழில் முதல்களை அழிப்பதற்கும் எதிராக வடக்கு மாகாண கடற்றொழில் இணையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (05.3.2024) யாழ் மாவட்டச் செயலகத்திலிருந்து ஆம்பமாகி உள்ளது.
வீதித் தடைகள்
போராட்டக்காரர்கள் இந்திய துணை தூதரகம் சென்று மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பொலிஸார் இந்திய துணை தூதரகத்திற்குள் போராட்டக்காரர்களை செல்ல விடாது வீதித் தடைகளையிட்டு மறித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந் நிலையில் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்ட போராட்டகாரர்கள் இலங்கை கடற்றொழிலாளர்களின் கடல் வளத்தை அழிக்காதே, தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்து, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.
மேலும் இந்த நாட்டில் வாழுகின்ற நாங்கள் எங்களது பாதுகாப்பையும் உரிமையையும்
வலியுறுத்தி தரையில் போராட்டத்தை நடாத்துகிற போது கம்பிக்கூடுகளை வைத்து
எங்களை தடுத்து நிறுத்துகிற இலங்கை படைகள் கடலில் எங்கள் பகுதியில் அத்துமீறி
எங்களையே தாக்குகிற இந்திய கடற்றொழிலாளர்களை ஏன் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது என
கேள்வி எழுப்பிய கடற்றொழிலாளர்கள் எங்களை கட்டுப்படுத்த முன்னர் இந்தியர்களை
கட்டுப்படுத்துங்கள் எனவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி-எரிமலை, தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


