ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
புதிய இணைப்பு
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ ஏலம் விடுவதற்கான மனுக் கோரும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (05) நடைபெறவிருந்த விலைமனு அழைப்பை 45 நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரை தெரிவு செய்வதற்கான விலைமனுக்கள் கோரப்படவுள்ளன.
இதற்கான ஏலங்களை சமர்ப்பித்தல் நேரலையில் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறிவித்தலை துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
விலைமதிப்பீட்டு அறிக்கை
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், விலைமனுக்களை இன்று (5.3.2024) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சமர்ப்பிக்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அந்தந்த ஏலங்களை சமர்ப்பித்தல் நேரலையில் செய்யப்பட உள்ளது மற்றும் அதை ஆதரிக்க ஒரு சிறப்பு தொழில்நுட்ப குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
விலைமதிப்பீட்டு அறிக்கையை தயாரித்த பின்னர் அது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முன்மொழியப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
