மன்னார் சதோச மனித புதைகுழி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்
மன்னார் சதோச மனித புதைகுழி தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.
மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு நேற்றையதினம் (5) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதளையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை
அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த வழக்கானது நேற்று (5) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது ஏற்கனவே அழைக்கப்பட்ட சட்டத்தரணிகள் பிரசன்னமாகி இருந்த நிலையில், மன்னார் நீதிமன்ற நீதவான் மற்றும் அழைக்கப்பட்ட நிறுவனத்தினரும் குறித்த சதோச மனித புதைகுழி பகுதியை நேற்றையதினம் காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
இதன் போது சில தீர்மானங்களுக்கு முன் வந்தார்கள். குறித்த புதைகுழி பிரதேசத்தை சுத்தப்படுத்துவதாகவும்,நிரம்பியுள்ள நீரை அகற்றவதற்கு நகர சபை இனங்கிக்கொண்டுள்ளதன் அடிப்படையில், குறித்த நீரை அகற்றுவது என்றும்,குறித்த புதைகுழியை பகுதி அளவில் மூடுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலதிக நடவடிக்கை
இதன் போது ஏற்கனவே எடுக்கப்பட்ட மண் சதோச நிறுவனத்திடம் காணப்படுகின்றதா,அது எங்கே இருக்கிறது போன்ற விடயங்களை பொலிஸார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும், தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில்,இந்த வழங்கு மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி மேலதிக நடவடிக்கைக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 19 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்து வெளிவந்த மாரீசன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
